காலங்கள் மாறலாம்...
கமலஹாஸன் நேற்று TV நேர்க்காணல் ஒன்றில் தனக்கு பிடித்த தமிழ் படங்கள் மிக குறைவே என்று கூறினார். ஏன் என்றால் மிகக்குறைவான படங்களே காலங்களைக் கடந்து இன்றும் அதே பொலிவுடன் திகழுகின்றன என்றார். பாலுமஹேந்த்ராவின் சில படங்களை உதாரணமாக சுட்டிக்காட்டினார்.
“Ability to stand the test of time" என்பது தான் ஒரு படைப்பின் சிறப்புக்கான அளவுகோளா என்று கேட்கலாம். அந்த விவாதம் வேறொரு நாள்.
காலத்தைக்கடந்து இன்றும் மங்காப் பொலிவுடன் விளங்கும் சில படைப்புகளைப் பற்றி இப்போது.
“அந்த நாள்” திரைப்படம் எனது அந்தப் பட்டியலில் முதல் இடம். பாடல் நாடகங்களை கேமராவில் படம் பிடித்து திரைப்படம் என்று விற்ற காலத்தில் screenplay, characterization போன்றவற்றை தமிழ் திரை உலகிற்கு புதுமையான முறையில் அறிமுகம் செய்து வைத்த படம். பாடத்தெரிந்த, மோசமான நடிகர்கள் இருந்தால் போதும் என்பதை மாற்றி, நடிப்புக்கும் கதாப்பாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படம். சிவாஜி, பண்டரி பாய் நடிப்பு ஓஹோ. மற்ற உப கதாப்பாத்திர நடிகர்களும் அற்புதம். எஸ். பாலச்சந்தர் தமிழ் நாட்டின் ஆர்சன் வெல்ஸ்; ”அந்த நாள்” சிடிசன் கேன் போன்றதொரு புரட்சிப்படம்.
முருகன் லெண்டிங் லைப்ரரியில் “பாரதியார் கதைகள்” என்ற புத்தகத்தை தேடிக் கண்டுபிடித்தேன். அதைத் தேடுவதற்காக போகவில்லை. வேறு ஏதோ புத்தகத்தைத் தேடும்போது இது அகப்பட்டது. லெண்டிங் லைப்ரரிகளில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம் unorganized bookshelves. தேடினால் மட்டுமே பிடித்தவை கிடைக்க வாய்ப்பு. And half the fun is in the hunt.
”பாரதியார் கதைகள்” புத்தகத்தில் ”ஆறில் ஒரு பங்கு” என்று ஒரு கதை. இந்திய சுதந்திரப் போராட்டத்தை backdropஆக கொண்டு எழுதப்பட்ட ஒரு காதல் கதை. என்ன அற்புதமான சித்தரிப்பு! First Person narrativeஆக சொல்லப்படும் இந்த கதையின் கதாநாயகனிடம் பாரதியின் குணாதிசயங்கள் நிறையவே உள்ளன. "காத்திருப்பேனோடீ... இதுபார் கன்னத்து முத்தம் ஒன்று” என்று எழுதியவர் எவ்வளவு பெரிய romanticஆக இருந்திருக்க வேண்டும். அது தான் இந்த கதையிலும் வெளிப்படுகிறது. பாரதியார் காலத்தை கடந்த ஒரு ஜீனியஸ் என்பதை எனக்கு மறுபடி நிரூபித்த கதை இது.
While "standing the test of time" may not be the only quality of greatness, when a piece of creative work manages to do that so well, it does automatically become great.
அந்த மாத்திரத்தில் சந்தேகம் இல்லை.
2 comments:
திரைப்படம் is the correct spelling.
Refer to http://www.tamildict.com/tamilsearch.php
திறை means treasury :-)
Post a Comment